முதற்கட்டமாக 32 தமிழ் அரரியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்க படலாம்
கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் தலைமையில் செயற்படும் குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளின் சட்டத்தரணிகள் இன்றையதினம் நீதிமன்றில் பிணை கோரிக்கைகளை முன்வைப்பர். சட்டத்தரணிகளின் பிணை கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும்படி சட்டமா அதிபர் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த அடிப்படையில் முதற்கட்டமாக 32 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை நேற்று செவ்வாய்க்கிழமை மீள் உறுதி செய்தார்.
எனினும் தமிழ் அரரியல் கைதிகளிடம் உருதியளித்தவாறு சென்ற 7ம் திகதி கைதிகள் விடுவிக்கபடாதமையை எதிர்த்து கைதிகள் மீண்டும் சாகும்வரையிலான உண்ணவிரத்திதில் இடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



