மட்டக்களப்பில் அடைமழை தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி கோயில்குளம் பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் ,வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, பூநொச்சிமுனை, காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால்,கர்பலா, பாலமுனை, கிரான், கல்லாறு, பெரிய கல்லாறு, துறைநீலாவணை, களுவாஞ்சிக்குடி ,பட்டிப்பளை, வவுனதீவு ஓள்ளிக்குளம், மண்முனை, சிகரம், புல்லுமலை, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை,நாவலடி, வாகரை உள்ளிட்ட பல வேறு பகுதிகளிலும் இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்யும் தொழிலாளிகளும் ,பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் பெரிதும் அவஸ்தைப் படுகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் ஆறு,கடல்,குளம் மற்றும் கிணறு ,நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-


