Breaking News

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குகான அடிக்கல் நடும் வைபவம்.- படங்கள்

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் கோரிக்கையில் ஒதுக்கப்பட்ட 5.4 மில்லியனில் முதற்கட்ட வேலையினை ஆரம்பம் செய்ய இன்று வைத்திய சாலையில் அடிக்கல் நட்டிவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.

இவ்வைத்தியசாலையின் நீண்ட தேவையாக் காணப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவினை அமைக்க அதற்கான கட்டிடக் குறைபாடு இருந்து வந்தன. கடந்த சில மாதங்களாக முதலமைச்சருடன் அதன் அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கையினைத் தொடர்ந்து இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.