29 நாள் நிறைவான ஆண் சிசு ரூபா 20,000.00 வாழைச்சேனையில் சம்பவம்; தாயுடன் மேலும் இருவர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனையின் பழையநகர் பிரதேசத்தில், பிறந்து 29 நாட்கள் நிறைவான ஆண் சிசுவை, விற்க முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்களுடன் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வாழைச்சேனை காவல்துறையினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிசுவின் தாய், சிசுவை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஆகிய மூவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பொலிசார் தெரிவிக்கையில் இச்சிசுவை 20,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கைதான சந்தேகநபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முநிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறினர்.



