அந்த கடைசி நிமிடத்தில் நமக்குள் என்னெல்லாம் நடக்கிறது தெரியுமா??
மரணத்தைத் தழுவும் அந்த சமயத்தில் நமக்குள் என்ன நடக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இதுவரை அதை எந்த விஞ்ஞானமும் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் உயிரின் கடைசித் துளியும் நின்று போகும்போது நமக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை முதல் முறையாக பதிவு செய்துள்ளனர் விஞ்ஞானிகள். மரணத்தைத் தழுவும் அந்த கடைசி நேரத்தின்போது பயமும், வேதனையும் மூளையை கடுமையாக பாதிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக மூளையின் வேதியியல் மாற்றங்களை ஆராய்ந்து அதை வெளிப்படுத்தியுள்ளனர். மரணத்துடன் நமது உடம்பு போராடிக் கொண்டிருக்கும் அந்த கடைசித் தருணத்தில், உடம்பு முழுவதும் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்றும். மிகுந்த உஷார் நிலையில் அது இருக்கும் என்றும் மூளை ஓய்வில்லாத நிலையில் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரணம் என்றால் என்ன?
மனிதர்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத பல விஷயங்களில் ஒன்றுதான் மரணத்தின்போதும், மரணத்திற்குப் பிறகும் நமது உடலுக்கு என்ன நேர்கிறது, நமது உயிர் எங்கு போகிறது என்பது.
மரணத்தின்போது என்ன நடக்கிறது
மரணமடையும் அந்த கடைசி நிமிடத்தில் நாம் எப்படி உணர்கிறோம், என்ன நடக்கிறது என்பது இதுவரை யாராலும் சொல்லப்படவில்லை. பதிவு செய்யப்பட்டதும் இல்லை. இந்த நிலையில் அந்த சமயத்தில் நமது உடம்பும், மூளையும் எப்படி உணர்கிறது, செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர்.
ஒருவர் கொலை செய்யப்பட்டால்
இது.தொடர்பாக ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதில் ஒருவர் கொலை செய்யப்படும்போது அவரது மூளையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை விளக்கியுள்ளனர்.
அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி
அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி இந்த வீடியோவை உருவாக்கியுள்ளது. இவர்களின் கூற்றுப்படி மரணத்தைத் தழுவும் சமயம், நமது உடல் முழுவதும் பய உணர்வுதான் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். மிக அதீதமான பயத்தை மரணிப்பவர்கள் உணர்வார்களாம்.
மூளையில் சேரும் பயம்
மரணத்தின் தருவாயில் நமது உடம்பு முழுவதும் பய உணர்வு மேலோங்கியிருக்குமாம். இந்த உணர்வுகளை மூளையில் உள்ள நியூரான்கள் சேர்ந்து உருவாக்கும் பிவிடி எனப்படும் பாரா வென்டிரிகுலார் நியூக்ளியஸ் கட்டுப்படுத்துகிறதாம். இதை சுருக்கமாக தலாமஸ் என்பார்கள்.
எது நடந்தாலும் தலாமஸ்தான் பாதிக்கும்
பயம், பதட்டம் உள்ளிட்டவை ஏற்படும்போது தலாமஸ்தான் அதிகம் பாதிக்கப்படும். இது மனதுக்கும், உடலுக்கும் இடையிலான உணர்வுகளைக் கடத்தும் சென்சார் போல செயல்படுகிறதாம்.
மனதிலிருந்து மூளைக்கு
மனதில் ஏற்படும் பய, பதட்ட உணர்வுகளை நரம்புகள் மூலம் இந்த தலாமஸுக்கு அனுப்புகிறது. அதையடுத்து மூளை உஷார் அடைகிறது. நமது உடலுக்கு என்னவோ நேரப் போகிறது என்று அது உணரத் தொடங்குகிறது.
தூண்டப்படும் அட்ரீனலின்
இதையடுத்து நமது உடலில் உள்ள அட்ரீனலின் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் உடலில் பதட்டம் கூடுகிறது. வியர்க்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் என்று நமது மூளையிலிருந்து கட்டளை வருகிறது.
இதயத் துடிப்பு அதிகரிக்கும்
அட்ரீனலின் சுரப்பு அதிகரிப்பதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது. நமது புலன்கள் அனைத்தும் ஷார்ப் ஆகிறது. நமக்கு வரப் போகும் மரணத்தை தடுக்க வழியுண்டா என்ற எதிர்பார்ப்பு உடலுக்குள் அதிகரிக்கும்.
கோமா
இந்த பதட்டமும், பயமும் அதிகரிக்கும்போதுதான் நமது மூளை கோமா நிலையை எட்டுகிறதாம். அதாவது எந்தவிதமான சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் இடம் இல்லாத அளவுக்கு செயல்பாடு பல மடங்கு அதிகரிக்கும்போது மூளை செயலிழக்கிறது.
மரணத்திற்குப் பின்னர்
மரணத் தருவாயில் நடப்பதைத்தான் இப்படி வி்ஞ்ஞானிகள் வீடியோ மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். அதேசமயம், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதற்கு வழக்கம் போல விஞ்ஞானிகளிடம் பதில் இல்லை.



