ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களோடு பழகும் அனுபத்தை பெற வேண்டுமா RMS குயின் மேரி கப்பலுக்கு வாருங்கள்
“RMS குயின் மேரி “ இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட பிரம்மாண்ட கப்பல். இது இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹோட்டல். இந்த கப்பலில் இரவு தங்கும் சூயுட்ஸ்கள்(365) , டைனிங் ஹால்கள், பங்விட் [Banquet ] எனப்படும் இரவு நினைவு பார்டிகள்,
வரலாற்று தேடல்களுக்கான சுற்றுலா, எல்லவற்றிற்கும் மேலாக ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களை பெற அழைப்பு விடுக்கிறார்கள். இந்த ஹோட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மிலியன் பேர் வந்து செல்கிறார்கள். ஹவுண்டேட் பகுதியாக சொல்லப்படுகிற இந்த பிரம்மாண்ட கப்பல் குறித்த தகவல்களை காண்போம்.
ஜான் ப்ரெளண் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் பொருளாதார நெருக்கடியினால் முக்கால் பாகம் கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில் 1931 ல் இருந்தது, பின்னர் இந்த நிறுவனம்“வைட் ஸ்டார் லைன்” கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள்.
இந்த வைட் ஸ்டார் லைன் தான் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம். அதனுடைய சாயல்கள் இந்த கப்பலில் பார்க்கலாம். அதை விடவும் இது பெரியது. இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி, உயரம் 181 அடி புகைகூண்டு வரை,எடை 81,237 டண்கள், இதன் எஞ்சின் 1,60,000 குதிரைதிறன் கொண்டது . 3000 பேர் சொகுசாக பயணிக்கலாம்.இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ” கிரே கோஸ்ட்…! “ மே 27, 1936 ல் வெள்ளோட்டத்தை துவக்கி சிறப்பித்தவர்கள் எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத்,டச்சு பிரபுக்கள்.
1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்துசெப்டம்பர் 19, 1967 ல் ஓட்டத்தை நிறுத்தியது அதாவது 31 வருடங்கள் உழைத்தது. இதனுடைய பெரிய உருவம் காரணமாக பனாம கால்வாய் வழியாக செல்ல முடியவில்லை. அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் [ஸ்ப்ரிட்] குறித்த ஆராய்சியாளர் பீட்டர் ஜேம்ஸ். 1991 இல் இருந்து இக்கப்பலில் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.
அவர் இப்படி கூறுகிறார் ” எனது ஆராய்சியின் படி குயின் மேரி அதித பேய்கள் நடமாட்டப் பகுதியாக கருதுகிறேன். பேய் குறித்த ஆராய்சிகள் உலகின் பல பகுதிகளில் மேற்கொண்டேன். இந்த கப்பலில் 600 பேய்கள் activeவாக இருக்கு, அநேக துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 16000 துருப்புகளை ஏற்றி இறக்கி உள்ளது.
இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அச்சமயத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது. மேலும் U.S கூட்டணி துருப்புகள் பிடித்த ஜெர்மன் மற்றும் இதாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்கொடுமைக்கு பயந்து அநேகர் தற்கொலை செய்து கொண்டனர். சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர்.
அந்த கால கட்டங்களில் சர்வீஸ் ராணுவத்தின் கையில் இருந்திருக்கிறது. இதன் ” குராகோ “ எனும் பாதுகாப்பு [எஸ்கார்டு போட்டுகள்] கப்பல்களின் மேல் மோதி 300 பேர் வரை அப்போர் சமயத்தில் மூழ்கி இறந்தனர். இக்கப்பலில் விநோத சப்தங்களும்..காப்பாற்றச் சொல்லும் கூக்குரல்களும் ஓலங்களும் சில பகுதிகளில் கேட்கிறது. இதில் இருந்த நீச்சல் குளத்தில் பல பேர் செத்துள்ளார்கள்.
13 நம்பர் அறை காற்று புகாவண்ணம் அடைக்கப்பட்டுள்ளது. “கப்பலின் மையப்பகுதியில் முதல் தர நீச்சல் குளத்தின் அருகில் 4 – 5 வயதுள்ள சிறுமி தன்னோடு பேசியதாகவும்; கப்பலின் மற்றொரு நீச்சல் குளத்திற்கு அழைத்ததாகவும்; இச்சிறுமியின் பெயர் ஜாக்கி எனவும்; சில சமயங்களில் இவளைத் தேடி சாரா எனும் நடுத்தர பெண்மணி ஒருவரும் வந்து சென்றதாகவும் கூறுகிறார். அந்த குறிப்பிட்ட நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது; மேற்படி இருவரும் அந்த நீச்சல் குளத்தில் முழ்கி இறந்தவர்கள்…கப்பலின் கேப்டன் ஸ்டார்க் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாகவும்.. ஸ்பிரிட் சிறுமி ஜாக்கி நகர்த்திய பொம்மை பற்றிய வீடியோ டேப் பதிவு உள்ளதாகவும் ; இச்சிறுமியை தான் மட்டுமல்ல நூறுபேர் ஒரேசமயத்தில் பார்த்துள்ள சாட்சி இருக்கிறது என்கிறார்…
சாரா நகத்தால் கையில் பிராண்டியது;… இப்படி பல தகவல்களை பீட்டர் ஜேம்ஸ் அடுக்குகிறார். ரூபின் வாக்னர் எனும் பெண்மணி, இதன் மார்கெட்டிங் கம்யூனிகேசன் டைரக்டர். ஒரு கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு, விமான பயண அதிகரிப்பு, அதிகரித்த செலவு இவை காரணமாக இக்கப்பல் பயணம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார். ஐரோப்பா மற்றும் யூனைடேட் மாகாணத்திற்கிடையே இக்கப்பல் இயங்கிவந்ததாகவும் இதன் பெரிய உருவம் காரணமாக பனாமா கால்வாய் கடல் பகுதியில் நுழையாமல் போனதலும் இதன் இயக்கம் நிறுத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கிறார்.
அவருக்கு ஸ்ப்ரிட் அணுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆனால் சக ஊழியர்களுக்கு ஏற்பட்ட பல அனுபவங்கள் தன்னோடு பகிர்ந்து கொள்ளப்ப்பட்ட தாகவும் சொல்கிறார். அலுவலக ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் தானாக திறந்து மூடும் கதவுகள்; பழங்கால உடையணிந்த உருவங்களின் நடமாட்டம்; கப்பலின் வெவ்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்ட தலைகள்; கை; கால்கள்; உருவங்கள் தோன்றி மறைதல்;…என பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. முனுமுனுக்கும் குரல்கள், அடித் தொண்டையில் வெளிப்படுத்தப்பட்ட சப்தங்கள்..; சர்சில் சூயூட் பகுதியில் ரூமின் சுவரில் அவரின் நேம் போர்டு தோன்றி மறந்த நிகழ்வு; [கப்பலில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது] சுருட்டு புகை..; வாசனை நடுநிசி மர்மங்கள்; சில்லிட்ட உணர்வு..; சில ரூம்களில் கட்டில் நகர்வு…சுவரினுள்ளிருந்து வெளியே தோன்றி மறைந்த உருவங்கள்.., அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரிந்து அணையும் மர்மம்;
இவையெல்லாம் கேட்பதற்கு ஏதோ சினிமா காட்சிகள் போலவே இருக்கிறது. ஆனால் உண்மை என்கிறார்கள் சென்று அனுபவப்பட்டவர்கள். இக்கப்பல் குறித்த சம்பவங்கள் உண்மையா..? என்னை பொருத்த வரை இவையெல்லாம் அந்த ஹோட்டலை நடத்த ஏற்படுத்தப்பட்ட வியாபார தந்திரங்களாக கூட இருக்கலாம். நடந்த சம்பவங்களை கதையாக கேட்டு அங்கு சென்றவர்களுக்கு பிரம்மையாகவும் இருக்கலாம்.



