Breaking News

பாரிசில் பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் பெண் உள்ளிட்ட இருவர் சுட்டு கொலை எட்டு பேர் கைது.

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கியிருந்தவர்களுக்கும் பாரிசிஸ் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு பெண் உள்ளிட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியாகியுள்ளனர்.

இதன்போது பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இந்த மோதல்களின் போது பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக செயற்பட்டு வெடித்துச் சிதறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் செயின்ட் டெனிஸ் எனும் பகுதியில் இடம்பெற்ற இந்த மோதல் காரணமாக குறித்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு இலக்காகி தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதலின் போது 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நபரைத் தேடும் பணியில் பிரெஞ்சு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடனான மோதல் இடம்பெற்றுள்ளது.