அப்பா ஆகிறார் facebook நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்
அமெரிக்கா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Facebook சமூக வலைதள நிறுவனத்தின் தலைவராக மார்க் சக்கர்பெர்க் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் தலைமையில் தனது 5 நண்பர்கள் மூலம் தொடங்கப்பட்டது. தற்போது ஃபேஸ்புக் சமூக வலைதள உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் மணைவி தற்போது நிறைமாத கர்ப்பணியாக உள்ளார். இதனால் 2 மாதத்தில் இவருக்கு குழந்தை பிறக்க உள்ளதால் தனது நிறுவனத்தில் தந்தைப் பேறு விடுமுறை எடுத்துக் கொள்ள உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் குழந்தை வரவுக்காக தானும் தன் மனைவி பிரிசில்லாவும் ஆவலுடன் காத்துக்கொண்டு இரு்ககிறோம் எனறும் வழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்க உள்ள நிலையில் தனது குழந்தை குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் அவர் தன்னுடைய இணையதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



