Breaking News

அரச மொழிக்கொள்கையினை அமுலாக்கும் பொருட்டு அரச அலுவலக அதிகாரிகளுக்கு பயிற்ச்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு‏.

அரச மொழிக்கொள்கையினை அமுலாக்கும் பொருட்டு தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் கீழ் நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி கொள்கை வேலைத்திட்டத்தின் தமிழ் மொழி அரச அலுவலக அதிகாரிகளுக்கு  சிங்கள மொழியும், சிங்கள மொழி அரச அலுவலக அதிகாரிகளுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி பயிற்சி திட்டம் மாவட்டரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்திற்கு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் கிழக்கு மாகான முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்களம்  இணைந்தது மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலக மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு  சிங்கள மொழி  தொடர்பான  பயிற்சி நெறி 12 நாட்கள் மட்டக்களப்பு நாவற்குடா கூட்டுறவு  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இப் பயிற்சியினை முடித்துக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு நாவக்குடா  கூட்டுறவு   கேட்போர் கூடத்தில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர்  கணேசமூர்த்தி  கோபிநாத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  இப்  பயிற்சி நெறியின் வழங்கிய வளவாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகம் மற்றும் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சிக்கு மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இருந்து  55 அரச அதிகாரிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர் இப்பயிற்சியின் இறுதி நாளான இன்று கலை, காலாச்சார நிகழ்வுகளும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.