மனித பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிரா சட்ட நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறி விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற மனித பாவனைக்கு உதவாத மரக்கறிகளையும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தலைமையிலான குழுவினர் இன்று மட்டக்களப்பு பிரதான மரக்கறி சந்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மனித பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் கைப்பற்றபட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.
சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மரக்கறி வகைகள் அழிக்கப்பட்டதுடன், மனித பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக உணவு சட்டத்தின்கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.


