Breaking News

ரஜினி சாருடன் நடிக்கப் போகிறேன்: குஷியில் குதிக்கும் ராதிகா


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து கபாலி படத்தில் நடிப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காளி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. தெலுங்கு திரையுலகில் ஆணாதிக்கம் அதிகம் என்றும், அங்கு நடிகைகளுக்கு மதிப்பு இல்லை என்றும் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனால் ராதிகாவை நடிக்க வைக்க தெலுங்கு திரை உலகினர் தயங்குகிறார்கள்.

இந்நிலையில் தான் அவருக்கு ஜாக்பாட் அடித்தது. ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராதிகாவுக்கு கிடைத்துள்ளது. இதனால் அம்மணி குஷியில் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன் என்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததும் ஏதோ வானில் பறப்பது போன்று உணர்ந்தேன். கபாலி படப்பிடிப்பில் நான் அடுத்த மாதம் கலந்து கொள்வேன் என்றார்.