புதுப்படம் படுதோல்வி ஐஸ்வர்யா ராய்க்கு ரூ 3 கோடி நஷ்டம்!
திருமணம், குழந்தை என்று செட்டிலான பிறகு மீண்டும் ஹீரோயினாகவே நடிக்க வந்த பலரும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் முன்னாள் டாப் நடிகையான ஐஸ்வர்யா ராய். குழந்தைப் பிறந்த பிறகு 3 ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமலிருந்த ஐஸ்வர்யா ராய், சில மாதங்களுக்கு முன், ஜஸ்பா என்ற படத்தில் நடித்தார்
இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய்க்கு 4 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதில் ரூ.1 கோடி முன் பணமாகப் பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா, மீதி 3 கோடி ரூபாயை படம் முடிந்த பிறகு பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அந்த பணம் படம் முடிந்த பிறகும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஐஸ்வர்யாராய் புறக்கணித்தார். இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. படம் வெளியான பின்பு லாபத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பங்கு தரப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கு ஒப்புக் கொண்டு சமரசமானார் ஐஸ்வர்யா ராய். ஆனால் படம் வெளியாகி படுதோல்வி அடைந்துவிட்டது. இதனால் அந்த ரூ 3 கோடி அவருக்கு கிடைக்காமலே போய்விட்டது. இனி கோர்ட் கேஸ் என அலையணுமா என யோசிக்கிறாராம் ஐஸ்வர்யா ராய்.



