ஜனாதிபதி மைத்திரிக்கும், பிரதமர் ரணிலுக்கும் உயர்நீதிமன்ற அழைப்பாணை நீதியரசர் கே.சிறிபவன் அதிரடி !
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று, அறிவித்துள்ள பிரதம நீதியரசர் கே.சிறிபவன், ஜனாதிபதி உள்ளிட்ட 75 பேரை அடுத்தமாதம் 15ஆம் நாள் உயர் நீதிமன்றில் முன்னிலையாககும்படி பணித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு ஒன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபத்தை அடுத்தே பிரதம நீதியரசர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்தமையில், ஊழல் இடம்பெற்றதாக சிங்கப்பூரின் குளோபல் ரிஷோஸ் இன்ரநஷனல் (தனியார்) நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போது, பிரதிவாதிகளில் ஒருவராக சிறிலங்கா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த மனுவை நிராகரிக்குமாறு, பிரதிவாதி தரப்பால் முன் வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபத்தை அடுத்தே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



