இரத்துச் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடை சட்டத்துக்குப் பதிலாக மற்றுமொரு புதிய சட்டத்தை அமுலாக்கும் ஜோசனையில் அரசாங்கம்...
தொடர்ந்தும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நடைமுறை படுத்துவதில் பாரிய விமர்சனத்துக்குள்ளான அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையரசால் இப்பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டது.
தற்போது இச்சட்டதிதுக்கு பதிலாக, அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள தேசப்பற்றுச் சட்டத்துக்கு ஒப்பான புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன, இப் புதிய சட்டத்தை வரைந்து வருவதாக தெரிவித்துள்ளன. இச் சட்டமானது அமுலாகும்பட்சத்தில், எப்படிப்பட்ட பயங்கரவாதச்சிக்கலையும் எதிர்கொள்ளக்கூடிய சர்வதேச தரத்திலான சட்டமாக இது அமையுமென தெரியவருகின்றது.



