உங்க குழந்தைகள் ஃபாஸ்ட் புட் விளம்பரங்களை டிவியில் பார்க்கிறார்களா?: எச்சரிக்கை ...
குழந்தைகள் டிவியில் எவ்வளவுக்கு எவ்வளவு ஃபாஸ்ட் ஃபுட் விளம்பரங்களை பார்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக்கூடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவியை ஆன் செய்தால் குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள். தற்போது குழந்தைகளை கவர பல ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனங்கள் கண்கவரும் விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன. விளம்பரங்களில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பொம்மைகளையும் காட்டி ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட வருமாறு அழைக்கிறார்கள்.
குழந்தைகள் எவ்வளவுக்கு எவ்வளவு ஃபாஸ்ட் ஃபுட் விளம்பரங்களை பார்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக்கூடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி விளம்பரங்களில் காட்டப்படும் பொம்மைகளை வைத்தும் தான் குழந்தைகள் எந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்களாம். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் விளம்பரங்களை பார்க்க விடாமல் தடுப்பது தான் பெற்றோருக்கு நல்லது. அத்தகைய விளம்பரங்கள் வராத டிவி சேனல்களை குழந்தைகளை பார்க்க வையுங்கள். அந்த விளம்பரங்களை பார்க்காவிட்டால் ஃபாஸ்ட் ஃபுட் தான் வேண்டும் என குழந்தைகள் அடம்பிடிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.



