ஜீவா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா...உங்கள் அபிமான நட்சத்திரங்களின் நடிப்பில் இஞ்சி இடுப்பழகி
ஜீவா, ஹன்சிகா உட்பட மொத்தம் 9 நட்சத்திரங்கள் ஆர்யா - அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார்களாம். ஆர்யா, அனுஷ்கா, ஊர்வசி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஆர்யாவின் நட்புக்காக ஏற்கனவே ஜீவா, ஹன்சிகா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஏராளமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நாகார்ஜுனா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், தமன்னா, ஸ்ரீ திவ்யா மற்றும் ரேவதி ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் மையக் கருத்து மக்களை முழுமையாக போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் தமன்னா மற்றும் காஜல் இப்படத்தில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர். ராணா, பாபி சிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் ஆர்யாவுடன் இணைந்து பெங்களூர் டேஸ் படத்தின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதால் ஆர்யாவுக்காக இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். நட்புக்காக ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருப்பதால் படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.



