சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் விருதும் வழங்கும் நிகழ்வு
சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு அங்கொடை மனநல வைத்தியசாலையில் உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் எம் . கணேசன் தலைமையில் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் விருதும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிரஸ்தாப நிலைய பணிப்பாளர் டி . பிரான்சிஸ் தலைமையில் உலக நண்பர்களின் தேவைக்கான அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு கல்லடி உளவியல்சார் கற்கைகள் நிலையத்தில் இன்று இடம்பெற்றது .
சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டியில் பங்குபற்றி முதல் இடத்தினை பெற்றுக்கொண்டவர்களுக்கு பண பரிசுகளும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வர்த்தக ,விவசாய கைத்தொழில் சம்மேளன பணிப்பாளர் நாயகம் வி . ரஞ்சிதமூர்த்தி , கௌரவ அதிதிகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஒ ,சி .ஒ .அசிஸ் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியா தடை இயக்க வைத்திய அதிகாரி திருமதி . மேகலா ரவிச்சந்திரன்,
காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி .சுசிகலா பரமகுருநாதன் , கோட்டமுனை மத்திய மருந்தகத்தின் வைத்திய அதிகாரி செல்வி . டி .கலைச்செல்வி சிறப்பு விருந்தினர்களாக உலக நண்பர்களின் தேவைக்கான அமைப்பின் பணிப்பாளர் ஒ . கங்காதரன் , ,மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தின் மொழி பெயர்ப்பாளர் ஒ .ஆர் . அமான் ,





