Breaking News

மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா மற்றும் பெற்றோர் தின நிகழ்வும்

கிறிஸ்து  பிறப்பு  விழாவை முன்னிட்டு  மார்கழி மாதத்தில்  நாடளாவிய ரீதியில் பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்று   வருகின்றன .

இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க  பாலர் பாடசாலை சிறார்களின்   ஒளிவிழா மற்றும் பெற்றோர் தின நிகழ்வும்  இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க   தலைவர் திருமதி ஆர் . மதுரநாயகம் தலைமையில்   மட்டக்களப்பு வில்லியம்  ஓல்ட்  மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க  பாலர் பாலசாலை சிறார்களின் ஒளிவிழா கரோல் கீதங்களும்   மற்றும் ஒளிவிழா கலை  நிகழ்வுகளும் இடம்பெற்றது .    

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு  இளம் மகளீர் கிறிஸ்தவ சங்கம்  உறுப்பினர்கள் , பாடசாலை சிறார்கள் , ஆசிரியர்கள்  ,பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் .