வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும்; மண்முனை வடக்கு கல்வி கோட்டம் ஓய்வு நிலை அதிபர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு
மட்டக்களப்பு கல்வி வலய அதிபர்களின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு கல்வி கோட்டம் ஓய்வு நிலை அதிபர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலய அதிபர்களின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு கல்வி வலய அதிபர்கள் நலன்புரிச் சங்க தலைவர் அதிபர் ஞா . சபேஷ்வரன் தலைமையில் மட்டக்களப்பு புனித திரேச பெண்கள் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே . பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் மற்றும் மண்முனை வடக்கு கோட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .
ஒருவர் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும் எனும் தொனியில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது










