மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நிகழ்வும் மற்றும் செவிப் புலனற்றோருக்கு செவிப்புலன் கருவி வழங்கும் நிகழ்வும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம், யுத்தம் மற்றும் விபத்துக்கள் போன்ற வற்றினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவயவங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் இந்தியன் ரோட்டரி கழகமும் மட்டக்களப்பு எரிடேஜ் ரோட்டரி கழகமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் வழங்க அளவீடும் செய்யும் நிகழ்வும் மற்றும் செவிப் புலனற்றோருக்கு விப்புலன் கருவி வழங்கும் நிகழ்வும் இன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தில் இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற செயற்கை அவயவங்கள் அளவீடு செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் வேல்ட் விஷன், கெமிட் மற்றும் எதிர் நீச்சல் ஆகிய நிறுவனத்தின் ஊடாக பயன்பெறும் பயனாளிகளுக்கு இந்த செயற்கை அவயவங்களுக்கான அளவீடுகள் மேற்கொள்ளப் பட்டது .
இந்நிகழ்வில் இந்தியா பாண்டிச்சேரி ரோட்டரி கழக தலைவர் எஸ் .சக்திவேல் இந்தியா பாண்டிச்சேரி ரோட்டரி கழக சமூகசேவையாளர் சர்வேஸ்வர சிங் மற்றும் மட்டக்களப்பு எரிடேஜ் ரோட்டரி கழக உறுப்பினர்கள் வேல்ட் விஷன், கெமிட் , எதிர் நீச்சல் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திரனாளிகளின் பயனாளிகளும் கலந்துகொண்டனர்



