நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொளித்து தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொளித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கி, தேர்தல் முறையில் மற்றம் மேற்கொண்டு ஜனநாயக தேர்தல் முறையை அறிமுகம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்தார். இது தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நேற்று இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வரலாற்று சிறப்புமிக்க யோசனை ஒன்றை முன்வைத்ததாக சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் அமைச்சரவை கூட்டம் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
- A.D.ஷான் -



