மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தொடர் மின்வெட்டு மாவட்ட மின்அத்தியட்சகர் காரியாலையம்.
இலங்கை மின்சார சபை மின் விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (19/11/2015) முதல் (21/11/2015) வரை மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு தலா ஒன்பது மணித்தியால தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்அத்தியட்சகர் காரியாலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (19) வியாழக்கிழமை திருமலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அருணகிரி வீதி, பூம்புகார், லொயிட்ஸ் அவன்யு, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்னஊறணி, பெரியஊறணி, இருதயபுரம், கொக்குவில், ஞானசூரியம் சதுக்கம் சவுக்கடி, தளவாய், புண்ணைகுடா ஆகிய இடங்களிலும்.
வெள்ளிக்கிழமை (20) மண்டூர், கணேசபுரம், சங்கர்புரம், தம்பளவத்தை, ராணமடு ஆகிய இடங்களிலும்.
சனிக்கிழமை (21) பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி மற்றும் வாழைச்சேனை பொலிஸ் பகுதி, கருவாக்கேணி, கிண்ணயடி, கிரான், கோரகல்லிமடு, சந்திவெளி, பாலயடிதோனை, பறங்கியாமடு, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மற்றும் புலிபாய்ந்தகல் ஆகிய இடங்களிளும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
தகவல் - இலங்கை மின்சார சபை மட்டக்களப்பு பிராந்திய கிளை பொறியியலாளர்.
தொடர்புகளுக்கு 0652222946
- A.D.ஷான் -
- A.D.ஷான் -



