பாகுபலி 2 வில் மாதுரி ?
பாகுபலி 2 வில் மாதுரி ?
ஒரு காலத்தில் இந்தி உலகை ஆட்டிப்படைத்த நடிகை மாதுரி தீக்ஷித், பாகுபலி 2வில் அனுஷ்காவின் சகோதரியாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி தற்போது பாகுபலி படத்தின் 2 வது பாகத்தினை எடுத்து வருகிறார். முந்தைய பாகத்தை விட பிரமாண்டமாகவும் புதுமையுடனும் இந்தப் படத்தை அவர் எடுக்கவிருக்கிறார்.
மேலும் பாகுபலி 2 வில் புதிய நட்சத்திரங்களை நடிக்க வைக்கவும் ராஜமௌலி ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் ஹிந்தி நடிகையான மாதுரி தீக்ஷித் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப் படத்தில் அவர் அனுஷ்காவின் மூத்த சகோதரியாக நடிக்கிறார் என்று கூறுகின்றனர். எனினும் இதைப் பற்றிய முறையான அறிவிப்புகள் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர சூர்யா மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர். பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.