மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு மொபிட்டல் பிராந்திய காரியாலத்தில் நேற்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டுக் கழகம் “இரத்த தானம் விலைமதிப்பற்ற ஓர்உன்னதமான நன்கொடை இதை வழங்குபவர்களுக்கு எவ்விதமான இலாபமும் கிடைக்காத போதிலும் மற்றவருக்கு வாழ்வளிக்கும் “ எனும் தொனியில் பத்தாவது வருடமாக நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு மொபிட்டல் பிராந்திய காரியாலத்தில் இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டுக் கழக தலைவர் தர்மேந்திரா தலைமையில் கோட்டமுனை விளையாட்டுக் கழகமும் மொபிட்டல் நிறுவனமும் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான மூகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மட்டக்களப்பு மொபிட்டல் பிராந்திய காரியாலத்தில் இடம்பெற்றது .
போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இளைஞர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் பத்தாவது வருடமாக இந்நிகழ்வு முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் நேற்று காலை முதல் மாலை வரை இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது .
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் . அமாலியா மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.


