Breaking News

உலக வீதி பாதுகாப்பு மற்றும் வீதி விபத்துக்களால் பாதிக்கபட்டோர்களுக்கான நினைவு தின நிகழ்வுகள்

உலக வீதி பாதுகாப்பு மற்றும் வீதி விபத்துக்களால் பாதிக்கபட்டோர்களுக்கான நினைவு தின நிகழ்வுகள் இன்று  உலகளாவியல் ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது  .

உலக ஆன்மீக பல்கலைகழகம்  மற்றும்  ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து   2010ஆம் ஆண்டு முதல்   2020 வரையான காலப்பகுதியினை உலக வீதிப் பாதுகாப்பு தசாப்தமாக பிரகனப்படுத்தி அதனை பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இனைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை உலகமெங்கும் நாடத்துகின்றது .

இதன் அடிப்படையில்  உலக முழுவதும் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்கள் , வீதி விபத்துக்களால் நிரந்தரமாக பாதிக்கப்பட்டவர்கள் , உறவினர்களை வீதி விபத்துக்களால் இழந்தவர்கள்  போன்ற  பாதிக்கப்பட்டோருக்கான உலக நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரம்ம குமாரிகள் இராஜ யோகா உப நிலையங்களில் விபத்துக்களால் பாதிக்கப்பட்டோருக்காக நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் வழங்கும் முகமாக விசேட கூட்டுத் தியானமும் ,வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கும்  இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை   05.30 முதல்   07.30 வரை இடம்பெற்றது  .

இதன் ஒரு நிகழ்வாக  மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோகா உப நிலையத்தினால் வீதி விபத்துகள்  தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும்    விசேட கூட்டுத் தியானமும் மட்டக்களப்பில் இடம்பெற்றது .