Breaking News

2016ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படவுள்ள தமிழ் மற்றும் இலக்கியம் புதிய பாடத்திட்டத்திற்கான இரண்டு நாள் செயலமர்வு‏.

2016ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படவுள்ள தமிழ் மற்றும் இலக்கியம் புதிய பாடத்திட்டத்திற்கான மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரனின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் ( தமிழ் ) எஸ்.யுவராஜன் ஒழுங்கமைப்பில் 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படவுள்ள தமிழ் மற்றும் இலக்கியம் புதிய பாடத்திட்டத்திற்கான மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு ஆசிரியர் மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.

இடம்பெற்ற புதிய பாடத்திட்டத்திற்கான இரண்டு நாள் செயலமர்வில் வளவாளர்களாக ஆசிரியர்கள் திருமதி வெ.பிரபாகரன், திருமதி எஸ்.சிவலிங்கம், க.காந்திமதி, மி.பவானந்தலிங்கம் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.