மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலய ஒளிவிழா நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி எம்.பேரின்பநாதன் தலைமையில்.
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு மார்கழி மாதத்தில் ஒளிவிழா கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் வேளையில் மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலய ஒளிவிழா நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி எம்.பேரின்பநாதன் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை பாடசாலை மாணவர்களால் மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து மங்களவிளக்கேற்றலுடன் ஒளிவிழா நிகழ்வு ஆரம்பமானது. ஒளிவிழா நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கரோல் கீதங்கள், யோகா சாகச நிகழ்வு மற்றும் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினரின் சிறப்பு ஒளிவிழா செய்திகளும் அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஒளிவிழா இனிதாக நிறைவு பெற்றது.
ஒளிவிழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி எ.சுகுமாரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அருட் தந்தை எஸ்.ஜெ.சகாயநாதன், ஓய்வு நிலை கோட்டக்கல்வி அதிகாரி டேவிட், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரி பழைய மாணவ சங்க செயலாளர் ஐ.ஜெ.சில்வஸ்டர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசியர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


