மட்டக்களப்பு கல்லடி – ஆரையம்பதி சகவாழ்வுக்கான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற தீபத்திருநாள் நிகழ்வுகள்.
இந்நிகழ்வானது சகல மதங்களுகிடையில் சமாதானம் சகவாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு கல்லடி – ஆரையம்பதி சகவாழ்வுக்கான சர்வமத ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்நிகழ்வில் தமிழ் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளும் தமிழ் பாரம்பரிய இனிப்பு பண்டங்களும் பரிமாறப்பட்டு இந்த தீபத்திருநாள் சிறப்பிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா , கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி . ஜெரோம் டிலிமா , கௌரவ அதிதிகளாக கல்லடி இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி சதுர்ப்புஜானந்தா , அருட்பணி ஜோசெப் மேரி , மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் கே . குணநாயகம் மற்றும் சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்



