Breaking News

கல்வி பொதுத்தர சாதாரணதர மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு‏ ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் துர்க்கா இந்து மன்ற ஏற்பாட்டில்.

மட்டக்களப்பு   ஆரையம்பதி  மண்முனை பற்று பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் துர்க்கா இந்து மன்ற ஏற்பாட்டில்  நான்காவது தடவையாக  நடாத்தப்படும்   கல்வி பொதுதர சாதாரணதர மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.

இம்முறை  கல்வி பொதுத்தர சாதாரணதரப்  பரீட்சையில் விஞ்ஞானம் மற்றும் வரலாறு பிரிவில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் துர்க்கா இந்து மன்ற ஏற்பாட்டில்  இன்று  காலை மட்டக்களப்பு  ஆரயம்பதி இராமகிஷ்ணன்  மிசன் மகா வித்தியாலய  அதிபர் எஸ்.சிவகுமாரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இடம்பெற்ற கல்வி கருத்தரங்கின் ஆரம்ப   நிகழ்வில் மண்முனை பற்று கோட்டக்கல்வி அதிகாரி  திருமதி  என்.தம்கவடிவேல், ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய  பரிபாலன  சபை உறுப்பினர்கள்,  துர்க்கா இந்து மன்ற உறுப்பினர்கள்  மற்றும்  இன்று இடம்பெற்ற  விஞ்ஞானம் மற்றும் வரலாறு பாடத்திற்கான  ஆசிரியர்கள்  ஜி.சுரேஸ்குமார், எஸ்.புனித  சுந்தரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரையம்பதி  மண்முனை பற்று பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட   பகுதியில்  வறுமை கோட்டின் கீழ்  வாழ்கின்ற  மாணவர்களின் கல்வி திறனை  ஊக்குவிக்கும்  நோக்குடனும் , கல்வி பொது தர சாதாரண தர  பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறும் நோக்குடனும்   இந்த இலவச கருத்தரங்கு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.