Breaking News

மட்டக்களப்பு தாமரைக்கேணி கிராம சேவை பிரிவில் பப்பாசி அறுவடை - படங்கள்


மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கீழ் இயங்கும் கல்லடி விவசாயப் போதனாசிரியர் பிரிவு  நகர் புற பழப்பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பல விரி வாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது .

இதன்  கீழ்   கல்லடி விவசாய போதனாசிரியர் பிரிவின் தாமரைக்கேணி  வேதாரணியம் கிராம சேவை பிரிவில்  பப்பாசி செய்கையில் ஈடுபட்டுள்ள யோகநாதன் வீட்டுத்தோட்டத்தில் பப்பாசி அறுவடை நிகழ்வு  கல்லடி விவசாய போதனாசிரியர் திருமதி தெய்வமனோஹாரி ரமேசன் ஏற்பாட்டில் மத்திய  வலய உதவி விவசாயப் பணிப்பாளர் வி . பேரின்பராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி .யோ . கோமலா தேவி . பொது சுகாதார பரிசோதகர் . வி .சி .சகாதேவன் ,கல்லடி விவசாயப் போதனாசிரியர்கள் , பெரும்பாக உத்தியோகத்தர் ,பாடவிதான உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்  மற்றும் விவசாயிகளும்  கலந்துகொண்டனர்