கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான சுத்தமான குடி நீர் வசதி .
DFCC வங்கி நாடாளாவியல் ரீதியில் பல சமூக அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு கிளையினால் மேற்கொள்ளப்படும் சமூக வேலைத்திட்டத்தின் கீழ் கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் எதிர் நோக்கிய சுகாதார முறையிலான குடி நீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் மட்டக்களப்பு DFCC வங்கி கிளையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான குடி நீர் நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி வி.யோகேந்திரன் தலைமையில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரம், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், DFCC வங்கி வடமத்திய மற்றும் கிழக்கு பிராந்திய முகாமையாளர் வஜிர புஞ்சிஹேவா ,முன்னால் கனிஷ்ட வித்தியாலய அதிபர் .சண்டேஸ்வர சர்மா மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் மாணவர்களுகிடையில் சுகாதாரப் பழக்கத்தை மேற்கொள்ளும் நோக்கில் அரசின் புதிய வேலைத் திட்டத்தின் கீழ் உயர் தரத்திலான நவீன முறையிலான வசதிகள் கொண்ட கழிப்பறை கட்டிடங்களையும் , சுத்தமான நீர் வசதிகளையும் தேசிய பாடசாலை மட்டத்தில் நடைமுறைபடுத்தி வருகின்றது.
இந்த நிலையில் டி . எப் . சி .சி . வங்கி சமூக அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கு முன் வந்து இதற்கான கட்டிதத்தை நிர்மாணித்து கொடுத்த டி . எப் . சி .சி . வங்கி முகாமையாளருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார் .


