Breaking News

எதிர்வரும் திங்கட்கிழமை 32 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்.

எதிர்வரும் திங்கட்கிழமை 32 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர் அதிகரிகளுடன் நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரையும் சந்தித்து பேசியதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின்  அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் விசேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று கூடிய சபை அமர்வின் போது இந்த பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.