சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் தலைமையில் ஆல் ஸ்டார் கிரிக்கெட் T20 போட்டி அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில்.
அமெரிக்காவில் கிரிக்கட் பிரபலப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த மூத்த பிரபல கிரிக்கட் வீரர்கள் பங்குபெறும் ஆல் ஸ்டார் கிரிக்கெட் இருபதுக்கு இருபது T20 கிரிக்கட் போட்டி நாளை (7) சனிக்கிழமை அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 11 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரபல வீரர்களான சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் தலைமையில் குறித்த போட்டி நடைபெறவிருப்பதுடன் இலங்கை வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, மற்றும் முத்தையா முரளிதரன்ஆகியோர் விளையாடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.







