Breaking News

துருக்கியின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய விமானத்தை சிரிய எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்திய துருக்கி.

சிரிய எல்லைப் பகுதியில் வைத்து ரஷ்யாவின் சுக்காய் 24 ரக போர்விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. துருக்கியின் வான் பரப்புக்குள் அந்த விமானம் அத்துமீறி நுழைந்ததால் எஃப் 16 ரக விமானங்கள் இரண்டு மூலம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுடுவதற்கு முன் ஐந்து நிமிட நேரத்தில் பத்து தடவை அந்த விமானத்தை தாம் எச்சரித்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ரஷ்ய விமானம் துருக்கிய வான் பரப்பில் நுழைந்ததாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுக்கிறது. தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்டுள்ளது என ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறுகிறது.

இந்த விமானம் தீப்பிடித்து எரிந்தபடி மலையில் விழுந்து நொறுங்குவதை வீடியோ படங்கள் காட்டுகின்றன. அதிலிருந்த விமானிகள் இருவரும் விமானம் விழுவதற்கு முன்பாக அதிலிருந்து வெளியே பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர். அதில் ஒருவர் சிரியாவில் டர்க்மென் படைகளின் வசம் சிக்கியுள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.