சரத் பொன்சேகா சட்டத்தை மதியாது செயற்பட்டுள்ளார் நீதிமன்றம் தீர்ப்பு.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு தமது ஆதரவினை வழங்கினர் என்ற குற்றத்திற்காக சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியிலிருந்து சென்ற ஜனாதிபதி தேர்தலின்போது , மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டமை, சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இவ்வாறு வெளி யேற்றப்பட்டவர்களில் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோகா தயாரத்ன, தென் மாகாண சபை உறுப்பினர் பத்மசிறி டி சில்வாவுடன் வடமேல் மாகாண சபை உறுப்பினர் மல்ஹமி ரத்நாயக்க ஆகியோர் அடங்குகின்ரனர்.
இவர்கள் கட்சி எடுத்த முடிவினை புறக்கணித்தமையால் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு தமது ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



