கிழக்கு மாகாணாத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் தொடபில் லங்கா I.O.Cஇன் திட்டம். முதலமைச்சர் அலுவலகத்தில் கலந்துரையாடல்.
லங்கா I.O.C இன் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிட்டம் ராஜு மற்றும் பிரதித் தலைவர் சுனில் குமார் நக்தாவானே அவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன் போது லங்கா I.O.C இன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், துறைமுக விஸ்தரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் தார் மூலப்பொருட்களை கிழக்கு மாகாணத்தில் பொதி செய்யும் நடவடிக்கை மூலம் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.