2015 ஆண்டிற்கான மட்டக்களப்பு கல்வி வலயத்திகுட்பட்ட பாடசாலைகளில் தரம் 06 முதல் தரம் 11 வரையான பாடசாலை மாணவர்களுகிடையில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா விடை போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் விஞ்ஞான பாட ஆசிரியர் ஆலோசகர் ப.சர்வேஸ்வரன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாககிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் பௌதிகத்துறை தலைவருமான கலாநிதி ப.பிரதீபன், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் பாடசாலை அதிபர் திருமதி த.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு வலய பாடசாலை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.