மிதக்கும் ஆயுதக்கப்பல் விவகாரம் இன்று விசேட அமைச்சரவை கூட்டம்
தனியார் பாதுகாப்பு நிறுவனமான அவன்ட் காட் மெரின்டைம் உரித்துடையதான மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை இடம்பெரவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இவ் விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக்குள் கருத்து மோதல்கள் இடம்பெற்றதையடுத்தே, இந்த விசேட அமைச்சரவை கூட்டம் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



