Breaking News

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 26 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் முதலமைச்சரால் வழங்கி வைப்பு.

இந் நிகழ்வானது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான லாஹிரின் ஏற்பாட்டில் ( 01.02.2015) அன்று மூதூர் தாருல் ஜன்னா வித்தியாலத்தில் நடைபெற்றது .இதன் போது 2000 ஆம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 26 குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வின் போது தாருல் ஜன்னா வித்தியாலய பாதையின் நிலையினை அவதானித்திருந்த முதலமைச்சர் தனது முயற்சியில் உடனடியாக குறித்த பாதையினை புனரமைத்து தருவதாக உறுதியளித்தார் ..