Breaking News

மட்டக்களப்பு வலய கல்வி பாடசாலைகளின் சாதனையாளர் பாராட்டு விழாவும் விருது வழங்கும் நிகழ்வும் - படங்கள்

மட்டக்களப்பு   வலய  கல்வி அலுவலக ஏற்பாட்டில்   மட்டக்களப்பு கல்வி வலயத்திலும் ,தேசிய மட்டத்திலும் நடத்தப்பட்ட போட்டி   பரீட்சைகளில் வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட சாதனையாளர்களுக்கு     விருதுகளும்  மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு   இன்று மட்டக்களப்பு  வலய கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில்  மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள்  தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில்   மட்டக்களப்பு வலய   கல்வி பணிப்பாளர்கள் , வலய கல்வி அலுவலக அதிகாரிகள்,  வலய பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் , ஒய்வு நிலை கல்வி அதிகாரிகள்  ,அதிபர்கள் ,ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இடம்பெற்ற  சாதனையாளர்கள் பாராட்டு விழா நிகழ்வில் மட்டக்களப்பு வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும்  வெற்றி பெற்றவர்களில்   புள்ளிகளின் தரப்படுத்தலுக்கு  அமைவாக   சாதனையாளர்களாக  தெரிவு செய்யப்படவர்களை  கௌரவிக்கும் முகமாக வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு  பதக்கங்களுடனான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .