Breaking News

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் அனுசரணையில் மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திரை குழு நடாத்தும் ஐயப்பன் மண்டல விசேட யாக பூசைகள் நேற்று இடம்பெற்றது

நேற்று காலை  07.00 மனியளவில்   மணிகண்ட மகர ஜோதி தீர்த்த  யாத்திர குழுவின்  ஐயப்பன் மண்டல பூசைகள்   சிவஸ்ரீ  சிவயோக செல்வ சாம்பஸ்ரீ சாம்பசிவம் குருக்கள் தலைமையில் மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்தில் இடம்பெற்றது .

நேற்று காலை இடம்பெற்ற  மணிகண்ட மகர ஜோதி தீர்த்த  யாத்திர குழுவின் ஐயப்பன் மண்டல  யாக பூசையில் மட்டக்களப்பு கோயில்குளம் பிள்ளையார் ஆலய பிரதம  குருக்கள்  சிவஸ்ரீ  செ .கு . உதயகுமார்   குருக்கள்  தலைமையில் விசேட யாக பூசைகள் இடம்பெற்று,   பிரதான கும்பம்  விநாயகருக்கு   அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை  தொடர்ந்து ஐயப்பன் பஜனாம்ர்தமும்  அதனை தொடர்ந்து   விநாயகர் விசேட தீபாராதனை   பூசைகளும்  இடம்பெற்றது . 

நேற்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின்   மணிகண்ட மகர ஜோதி   ஐயப்பன் மண்டல பூசை  நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர் .