பீப் பாடல்: சிம்புவை நடிகர் சங்கம் கேள்வி கேட்காதது ஏன்? சரத்குமார்
பீப் பாடல் தவறானது என்று கூறியுள்ள சரத்குமார், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.
சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் கோவை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பெண்களை இழிவுபடுத்தி சிம்பு பாடல் பாடியது தவறானது. யார் வந்து பெண்ணையோ, பெண் இனத்தையோ தவறாக சித்தரிக்கின்ற அது படமாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி அது வரவேற்கத்தக்கது அல்ல என்பது என்னுடைய கருத்து, அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று கூறியுள்ளார்.



