Breaking News

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின்- தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 35வது சமூகத்தை நோக்கிய பயணத்தில் வறிய பெற்றோரை இழந்த மற்றும் வலது குறைந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு நாளை 24-12-2015 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வை தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வில் உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள்,அரச உயர் அதிகாரிகள் உட்பட பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.