Breaking News

திணைக்களத் தலைவர் பதவிகளை வழங்குவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸை அழித்து விடலாம் என அமைச்சர் ரிஷாத் கனவு காண்கின்றார் முன்னாள் மாநகர சபையின் உறுப்பினர் றம்ழான்

திணைக்களத் தலைவர் பதவிகளை வழங்குவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸை அழித்து விடலாம் என அமைச்சர் ரிஷாத் கனவு காண்பதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
  
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் ரிஷாத் பதுர்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று யாருக்குச் சொந்தம் என்று தெரியாத நிலையில் இழுபறிக்குள் சிக்கித் தவிக்கின்ற இன்றைய காலகட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அழித்து கிழக்கில் கால்பதித்து விட வேண்டும் என்ற பகல் கனவுகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஒரம் கட்டப்பட்ட சிலரையும்  கட்சியில் அங்கம் வகிக்கும் பதவி மோகம் பிடித்த இன்னும் சிலரையும் கபடத்தனமாக தேடிப்பிடித்து திணைக்களத் தலைவர் பதவிகளை வழங்கி அதன் மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை முழுமையாக அழித்து விடுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதுர்தீன் கனவு காண்கின்றார் அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது.
  
தனது அமைச்சின் கீழ் இருக்கும் திணைக்களங்களை சிறப்பாக செயற்படுத்த வேண்டுமானால் குறித்த திணைக்களங்களுக்கு அத்துறைசார்ந்தவர்களை திணைக்களத் தலைவர்களாக நியமித்திருக்க வேண்டும்  அப்போதுதான் மக்கள் அதிக பட்ச நண்மைகளை பெறுவார்கள் அத்தோடு அமைச்சின் நோர்க்கமும் நிறைவேறும் அதை விடுத்து முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற தீய நோர்கோடு அக்கட்சியால் ஓரம் கட்டப்பட்வர்களையும்  தற்போது முஸ்லிம் காங்கிரஸில் பதவி மோகம் பிடித்து அலைகின்றவர்களையும் தேடிப்பிடித்து திணைக்களத் தலைவர் பதவியை வழங்கி வருகின்றார் அச்செயற்பாடு மூலம் முஸ்லிம் காங்கிரஸை அழித்து விடலாம் என அமைச்சர் ரிஷாத் கனவு காண்கின்றார் அது ஒருபோதும் நிறைவேறாது .
   
இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே அக்கட்சியையும் இலங்கை முஸ்லிம்களையும் உண்மையாக நேசிக்கும் எந்தவொரு முஸ்லிமும் பட்டம் பதவிகளுக்கு சோரம் போகமாட்டார்கள் கடந்த காலத்தில் பட்டம் பதவிகளுக்காக இக் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் இழைத்து விட்டுச் சென்ற சுயநலவாதிகளுடன் ஒருபோதும் கூட்டுச்சேரவும் மாட்டார்கள்  ஒரு காலத்தில் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் இழைத்து விட்டு பட்டம் பதவிகளுக்காகவும் சுயநலத்திற்காகவும் கட்சிமாறினார்களை அடுத்து வந்த தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஓரம் கட்டியது என்பதை இப்போது பட்டம் பதவிகளுக்காக கட்சிமாறுகின்றவர்கள் பாடமாகக் கொள்ள வேண்டும்.
  
அன்று அவ்வாறு ஓரம்கட்டப்பட்டவர்கள் ஒருகாலத்தில் பட்டம் பதவிகளுக்காக இந்த சமூகத்தை காட்டிக் கொடுத்தவர்கள் எல்லோரும் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எங்கோ ஒரு மூலையில் முகவரியின்றிக் கிடந்தவர்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது அவர்களை தூசிதட்டி சமூகமயப்படுத்தி அரசியல் முகவரி தேடிக்கொடுத்தது இந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை இன்று பதவிகளுக்காக முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு ஒன்று சேறுகின்றவர்கள் மனச்சாட்சிகளுடன் சிந்திக்க வேண்டும் அதேபோன்று அன்று முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பட்டம் பதவிகளுக்காக கட்சிமாறியவர்கள் இன்னுமோர் சந்தர்ப்பத்தில் பட்டம் பதவிக்காக அமைச்சர் ரிஷாத்தை விட்டு கட்சி மாறமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.
   
இன்று திணைக்களத் தலைவர்கள் பதவிகளுக்காக முகவரி தேடித்தந்த கட்சியை அழிப்பதற்கு வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுகின்றவர்கள் கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் பதவி வகித்தவர்கள் அக்காலப்பகுதியில் அப்பதவிகளைக் கொண்டு சாதித்தது தான் என்ன? அவர்களது பதவிகளினூடாக வாக்களித்த மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் என்ன? அன்று தனக்கு கிடைத்த அந்த உச்ச கட்ட அரசியல் அதிகாரங்களைக் கொண்டு சுயநலன்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்திருந்தால் ஏன் இன்று திணைக்களத் தலைவர் பதவிகளுக்காக அழைய வேண்டும் எதனையும் சாதிக்காதவர்கள் இன்று அமைச்சர் ரிஷாத் பதுர்தீன் வழங்கியுள்ள திணைக்களத் தலைவர்கள் பதவியைக் கொண்டு என்ன சாதிக்கப்போகின்றார்கள் இந்த திணைக்களத் தலைவர் பதவியால் முஸ்லிம் சமூகம் அடையப்போகும் அதிகபட்ச உச்சக்கட்ட நண்மைதான் என்ன? எதுவுமில்லை. 

அன்று சுயநலத்திற்காக கட்சிமாறியதனூடாக தன்னைத்தானே வளப்படுத்திக் கொண்டவர்கள் இன்றும் சுயநலத்திற்காக இத்திணைக்களத் தலைவர் பதவியைப் பொற்று தங்களைத் தாங்களே வழப்படுத்திக் கொள்ளப்போகின்றார்கள் இதைத்தவிர வேறு எதனையும் இப்பதவியால் சமூகத்திற்கு சாதித்து விட முடியாது.

அமைச்சர் ரிஷாத் வழங்குகின்ற இந்த திணைக்களத் தலைவர் பதவிகள் தனி மனிதனை திருப்பதிப்படுத்தவே அன்றி அதன் மூலம் முஸ்லிம் சமூகம் எந்த பலனையும் அடையப்போவதில்லை இதுவே இவர்களது இறுதிக் கட்ட அரசியலுமாகும் முஸ்லிம் சமூகத்திற்கு எதனையும் சாதிக்க முடியாத இத் திணைக்களத் தலைவர் பதவிகளை வழங்கி விட்டு அரசியல் அதிகாரங்களை வழங்கியுள்ளதாக பந்தாக் காட்டுகின்றார்.

அமைச்சர் ரிஷாத் இவரது இவ்வாரான தீய சிந்தனைகள் ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸை அழித்து விடாது எனவும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் மேலும் தெரிவித்தார்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-