Breaking News

மட்டக்களப்பு மாவட்ட திறன்அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிட திறப்பு விழா

மட்டக்களப்பு மாவட்ட   திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிட திறப்பு விழாவும்  மட்டக்களப்பு மாவட்ட  கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நலன்புரிச்சங்க  வருடாந்த ஒன்று கூடல் மற்றும் பிரியா விடை  நிகழ்வும்  மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  கே . மோகன் பிறேம்குமார் தலைமையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது . 

ஆரம்ப நிகழ்வாக  அதிதிகள் மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர் இதனை தொடர்ந்து  மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .  

முதல் நிகழ்வாக  இந்நிகழ்வுக்கு முதன்மை  விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி கிராம அபிவிருத்தி , கட்டிடம்  , கிராமிய கைத்தொழில் ,போக்குவரத்து ,வீடமைப்பு ,சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ஜனாப் .யு .எல் . எ .அஸீஸினால்  மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக   கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள  மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிடம்  இன்று திறந்து வைக்கப்பட்டது . 

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள கடமைகளில் 2015  ஆம் ஆண்டு  சிறப்பாக சேவையாற்றி  ஓய்வு பெற்று சென்ற உத்தியோகத்தர்களையும் ,  திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற  உத்தியோகத்தர்களை கௌரவிப்பு மற்றும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண  பணிப்பாளர் .கா . அருந்தவராஜா , அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் ஜனாப் .எச் .கலிலூர்  ரகுமான் , திருகோணமலை    மாவட்ட உத்தியோகத்தர் .வி .பாஸ்கரன் ,கிழக்கு மாகாணம் ,கிராம அபிவிருத்தி திணைக்களம் நிர்வாக உத்தியோகத்தர் செல்வி . வி .டி .பேனாட் மற்றும் மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக   உத்தியோகத்தர்கள்  பலரும் கலந்துகொண்டனர் .