Breaking News

அமிர்தகழி கருணை பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வு அதிபர் திருமதி .பிரதீபா தர்ஷன் தலைமையில் இடம்பெற்றது. -படங்கள்

ஆரம்ப நிகழ்வாக சிறார்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது .

அதனை தொடர்ந்து   மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின்  ஒளிவிழா கலை நிகழ்வுகள்  இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து சிறார்களுக்கு அதிதிகளினால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்  ஒளிவிழா நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு  மட்டக்களப்பு எகெட்  நிறுவன  இயக்குனர் அருட்பணி ஜெரோன் டிலிமா ,  அமிர்தகழி  கப்பலேந்தி அன்னை ஆலய பங்குதந்தை  சி .வி .அன்னதாஸ் ,, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்  எஸ் . பிரபாசங்கர் , மட்டக்களப்பு மாவட்ட செயலக  சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்  வி .குகதாஸ்   மற்றும் அமிர்தகழி  பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி   சிறார்கள் . சிறார்களின்  பெற்றோர் ஆகியோர் கலந்துக்கொண்டனர் .