Breaking News

பெண்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி மன்றங்களில் அதிகரிப்பதற்கான பணிகள் நிறைவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரிப்பதற்கான திருத்தத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.

வரவுத் செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் 8 ஆவது நாள் இன்றாகும். அத்துடன் தேசிய கணக்காய்வு சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் கூறினார்.

இதன் மூலம் கணக்காய்வாளர் நாயகத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
- A.D.ஷான் -