Breaking News

மட்டக்களப்பு மறை மாவட்ட 21 முன்பள்ளி களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கோடு நீர் சுத்திகரிப்புடன் கூடிய வடிகட்டிகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு  மறை மாவட்டம்  கரித்தாஸ் எகெட்  நிறுவக   அனுசரணையில் செயல்படுகின்ற முன்பள்ளிகளுக்கு  நீர் சுத்திகரிப்பு தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்  நிறுவகம்   லிபாரா  நிறுவன நிதி உதவியுடன்  மட்டக்களப்பு  மறை மாவட்டத்தின்  கரித்தாஸ் எகெட்  நிறுவக  இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா தலைமையில்  மட்டக்களப்பு மறை மாவட்டத்தில்  செயல்படுத்தப்படுகின்ற   21  முன்பள்ளிகளுக்கு  பெறுமதியான  நீர் சுத்திகரிப்பு தாங்கிகள்  வழங்கப்பட்டு வருகின்றன .

இதன் ஒரு திட்டமாக   மட்டக்களப்பு   அமிர்தகழி , சகாயபுரம்  ,கூழாவடி , பாலமீன்மடு கருவப்பங்கேணி , பனிச்சையடி , மயிலம்பாவெளி  ஆகிய  முன்பள்ளிகளுக்கு  நீர் சுத்திகரிப்பு தாங்கிகள்  நேற்று வழங்கி வைக்கப்பட்டது .

நேற்று  இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி திட்டத்தில் கரித்தாஸ் எகெட்  நிறுவக கல்வித்திட்ட பொறுப்பாளர் திருமதி . எம் . அந்தோனியா மோகனதாஸ் , கரித்தாஸ் எகெட்  நிறுவக  ஊடகப் பிரிவு உத்தியோகத்தர் எஸ் . மைக்கல் இராயப்பு மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்