மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரம் ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரம் ஆரம்ப நிகழ்வூ நேற்று(25) காலை 8.45 மணியளவில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரம் ஆரம்ப நிகழ்வில்இ மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டம் ஒரு வார காலத்திற்கு தொகுதி வாரியாகப்பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில், அனைத்து அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வூகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.



