அனைத்து தொலைபேசி வலையமப்புகளுக்குமான வெளிச்செல்லும் கட்டணங்கள் பெப்ரவரி 01முதல் மாற்றமடையும்
தற்போதைய தொலைபேசி சேவை வழங்குநர்களில் காணப்படும் சிறிய நிறுவனங்களுக்கு போட்டித்தன்மைக்கான சந்தர்பங்களை அதிகரிக்கும்பொருட்டு, தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கான பொதுவான ஓர் கட்டணமுறையை நடைமுறை படுத்துவதற்கென, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எதிர்பார்துள்ளது.
இம்முறை, அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக, அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரே வலையமைப்புக்கிடையிலான கட்டணம், அதிகபட்சம் 50 %த்தால் அதிகரிக்கப்பட, வேறு வலையமைப்புகளுக்கிடையிலான கட்டணம், அதிகபட்சம் 28 %த்தால் லும் குறைக்கப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது.